'என்ன சச்சினுக்கு இப்படி ஒரு வியாதியா?.. ரகசியத்தை உடைத்த கங்குலி!

Home > News Shots > தமிழ்

By |
when Sachin Tendulkar sleep walking habit scared roommate Ganguly

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.இவரும் அதிரடி ஆட்டக்காரரான கங்குலியும் நெருங்கிய நண்பர்கள்.மைதானத்தில் தொடங்கிய நட்பு இருவரும் ஓய்வு பெற்ற பின்பும் இன்றுவரை  தொடர்கிறது.ஒரு நாள் போட்டிகளில் இவர்களின் பார்ட்னர்ஷிப் அபாரமானது.

 

சமீபத்தில் கங்குலி அளித்த பேட்டி ஒன்றில் சச்சின் குறித்து  மலரும்  நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

 

அதில் கங்குலி கூறும்போது, "சச்சினை அவரது 14 வயதில்  இருந்து எனக்கு தெரியும்.நான் அவரை முதல்முதலாக  பார்த்தபோது அவர் நீண்ட தலைமுடியுடன் இருந்தார்.இங்கிலாந்திற்கு  ஒரு நாள் போட்டிக்காக சென்றிருந்த போது அவரும் நானும் ஒரே  அறையில் தங்கியிருந்தோம்.

 

அப்போது நள்ளிரவில் சச்சின் திடீரென எழுந்து நடமாடினார். நானும் அவர் பாத்ரூம் செல்வதாக நினைத்து உறங்கி விட்டேன். தொடர்ந்து 2-வது நாளும் அவர் அதேபோல நள்ளிரவில் எழுந்து நடக்க ஆரம்பித்தார்.

 

அப்போது நான் மணியைப் பார்த்தேன் சரியாக 1.30. இதனால் நான் கொஞ்சம் பயந்து விட்டேன். மறுநாள் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''ஆம். எனக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளது என மிகவும் கூலாக சொன்னார்,'' இவ்வாறு கங்குலி சச்சின் குறித்த சுவாரசிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Tags : #SOURAVGANGULY #CRICKET #SACHIN TENDULKAR #SOURAVGANGULY