அதிகாரத்தைப் பயன்படுத்தி.. ரித்விகாவை வெளியேற்றத் துடிக்கும் "பிக்பாஸ் தலைவி'

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 6th Promo video 3

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் ஜனனி, பாலாஜி, ரித்விகா ஆகிய மூவரும் அமர்ந்து, பிற போட்டியாளர்களைப் பற்றி புறணி பேசுகின்றனர். அப்போது ஜனனி நீ பைனல்ஸ் போனா நான் சந்தோஷப்படுவேன்,'' என ரித்விகாவைப் பார்த்து சொல்கிறார்.

 

தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் மஹத்-பாலாஜி இடையே தகராறு ஏற்படுவது போலவும், பதிலுக்கு பாலாஜி என்ன அடிக்கப் போறியா? என கோபமாகக் கேட்பது போலவும் காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 3-வது ப்ரோமோ வீடியோவில் யாஷிகா தலைவி என்பதால், அவர் நேரடியாக ஒருவரை நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் சொல்கிறார். இதனைத்தொடர்ந்து யாஷிகா ரித்விகாவை நாமினேட் செய்வது போல காட்சிகள் உள்ளன.