ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. மஹத் ஆவேசம்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil July 31st Promo Video 3

பிக்பாஸ் வீட்டின் தலைவியான ஐஸ்வர்யா குப்பைகளை வாரி பாலாஜி தலையில் கொட்டுவது போலவும், பதிலுக்கு பிற போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்வது போலவும் முதல் ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் வெளியாகின.


தொடர்ந்து வெளியான  2-வது ப்ரோமோ வீடியோவில் விதிமுறைகளை மீறி பகலில் உறங்கும் பாலாஜியை , சந்திரமுகியாக உருமாறி ஐஸ்வர்யா எழுப்புவது போல காட்சிகள் வெளியாகின.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஒரு கை பார்த்துருவோம் என மஹத், ஐஸ்வர்யாவிடம் சண்டை போடுவது போல காட்சிகள் உள்ளன. கோபப்படும் மஹத்தை பாலாஜி உள்ளிட்டவர்கள் சமாதானப்படுத்துவது போலவும், ஆனால் ஆத்திரம் அடங்காத மஹத் பிக்பாஸ் வீட்டின் கண்ணாடிகளை  உடைப்பது போலவும் காட்டப்படுகிறது.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீடு போர்க்களமாக காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.