'பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரகசியம்'..கமல்ஹாசன் பேட்டி!

Home > News Shots > தமிழ்

By |
Kamal Haasan reveals why he hosted Biggboss show

தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் உள்ள ரகசியம் குறித்து நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பிக்பாஸ் குறித்த கேள்விக்கு, ''பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க மக்கள் தான் காரணம். எனக்கு மக்களை  ரீச் பண்ணனும். நீங்க யோசிச்சு பாருங்க கணக்கு போடுங்க.  ஒரு பத்தாயிரம் பேரை கூட்டணும்னா அதுக்கு எவ்வளவு செலவு ஆகும். எத்தனை நாள் ஆகும். அதுக்கு அனுமதி எல்லாம் வாங்கணும்.

 

இதுவே ஒரு லட்சம் பேரைக் கூட்டணும்னா அதுக்கு பாதுகாப்பு, மேடை அதுக்கு மேல குப்பை அள்ளுறதுக்கான செலவு. அதுக்கு மேல விருந்தாளிகள், பயணம், டிரான்ஸ்போர்ட் இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஒவ்வொரு சனிக்கிழமையும் 32 ஒரு லட்சம் மீட்டிங் இல்லை 302 ஒரு லட்சம் மீட்டிங் போயிட்டு இருக்கு.ஒவ்வொரு வாரமும் 2 வாக்கியங்கள் மட்டுமே மக்களிடம் சொல்ல முடியும் என்றால் கூட போதுமானது,'' இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.