இந்த வாரம் பிக்பாஸ் 'வீட்டைவிட்டு' வெளியேறியது யார்?

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil: Who is evicted this week?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை மமதி சாரி,ஆனந்த் வைத்யநாதன், நித்யா மற்றும் ரம்யா என மொத்தம் 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

இந்தநிலையில் கடந்த வாரம் மும்தாஜ்,யாஷிகா,பொன்னம்பலம்,மஹத் மற்றும் வைஷ்ணவி ஆகிய ஐந்து பேர் நாமினேட் செய்யப்பட்டனர். இதனால் இவர்கள் 5 பேரில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப் போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

 

இந்தநிலையில் இன்று மும்தாஜ்,யாஷிகா,பொன்னம்பலம்,மஹத் ஆகிய நால்வரும் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். இதனால் வைஷ்ணவி வீட்டைவிட்டு வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

 

ஆனால் கடந்த சீசனில் சுஜாவை சீக்ரெட் ரூமுக்கு அனுப்பியது போல இந்த சீசனில் வைஷ்ணவியை, கமல் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பி வைத்துள்ளார்.இதனால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.