போட்டியாளர்களை 'ரகசியமாக' கண்காணிக்கும் கமல்.. காரணம் என்ன?

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil July 28th promo video 2

பிக்பாஸ் வீட்டில் நீலம்,மஞ்சள் என 2 அணிகளாகப் பிரிந்து போட்டியாளர்கள் டாஸ்க் விளையாடினர். இதில் மும்தாஜ் தலைமையிலான மஞ்சள் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

எனினும் விளையாட்டில் ஜெயிப்பதற்காக சிலபல திருவிளையாடல்களை போட்டியாளர்கள் நிகழ்த்தினர். இதுகுறித்து நிகழ்ச்சித்தொகுப்பாளர் கமல் விலகியது திரை, வெளிறியது வேசம்,வெளி வந்தது சுயரூபம், என போட்டியாளர்களை சாடுவது போல ப்ரோமோ வீடியோ ஒன்று மதியம் வெளியாகியது.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியாகிய ப்ரோமோ வீடியோவில் கமல் திரை ஒன்றை விலக்கி போட்டியாளர்களை ரகசியமாக கண்காணிப்பது போல காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.