இங்கிலாந்தில் டான்ஸ் ஆடிய 'இந்திய கேப்டன்'.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Watch Video: Kohli, Dhawan does dance on the field

கேப்டன் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

 

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணியினர் விளையாடி பயிற்சி செய்து வருகின்றனர்.

 

இதேபோல இந்திய அணி எஸ்எக்ஸ் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில் 3-ம் நாள் ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் மைதானத்தில் நுழைந்தனர். அப்போது பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன.

 

இதைக்கண்ட கோலி உற்சாகமாக நடனமாட,தவானும் சில ஸ்டெப்ஸ் போட்டார். இந்த வீடியோவை எஸ்எக்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.