'சிங்கிள்' இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 'விராட்' வாங்கும் தொகை எவ்வளவு தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By |
How Much Virat Kohli Charges For a Single Instagram Post?

சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து, பணம் சம்பாதிக்கும் டாப் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

 

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடலும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான கெய்லி ஜென்னர்  முதலிடம் பிடித்துள்ளார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிடும் விளம்பரம் ஒன்றுக்கு இவர் 6 கோடியே 87 லட்சம் ரூபாய் பெறுகிறார்.

 

2-வது இடத்தை அமெரிக்க நடிகை செலினா கோமஸ்ஸும் 3-வது இடத்தை போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் 17-வது இடத்தை இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் கோலி பதிவிடும் விளம்பரம் ஒன்றுக்கு ரூ.82 லட்சம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.