இந்தியாவுக்கு பின்னடைவு:இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா-சுந்தர் நீக்கம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 02, 2018 10:55 AM

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி அங்கு மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரிட் பும்ரா, வாஷிங்க்டன் சுந்தர் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக ஐபிஎல் போட்டிகளில் அசத்திய தீபக் சாஹர்,குணால் பாண்டியா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் குணால் பாண்டியா டி20போட்டியிலும், அக்சர் படேல் ஒருநாள் போட்டியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி 20 போட்டிகளில் விளையாடிய போது பும்ராவுக்கு இடது பெருவிரலில் அடிபட்டது. இதேபோல அயர்லாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியின்போது சுந்தருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரால் நடக்க முடியவில்லை என்பதால் விரைவில் இந்தியா திரும்புகிறார். ஆனால் ஒருநாள் போட்டி நடைபெறுவதற்குள் பும்ரா சரியாகி விடுவார் என கூறப்படுகிறது.
எனினும் டி20 போட்டிகளில் பும்ரா விளையாட மாட்டார் என்பதால், இந்தியாவுக்கு இது பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- MS Dhoni's wife Sakshi applies for gun licence, here is why
- ஐபிஎல் அணிகளின் 'பிராண்ட்' மதிப்பு இதுதான்.. முதலிடம் 'யாருக்கு' தெரியுமா?
- இந்திய அணி 'சிஎஸ்கே' போல அனுபவம் வாய்ந்தது.. ஆப்கானுக்கு 'பதிலடி' கொடுத்த பிரபலம்!
- மனைவி சாக்ஷியுடன் 'சூப்பர் ஸ்டார்' படத்தை பார்த்து ரசித்த தோனி!
- MS Dhoni reveals his fitness secret