தோனி எப்படி தன் வெற்றிக்கு பங்களித்தார் என்பதைக் கூறும் இளம் இந்திய கிரிக்கெட் வீரர்

Home > News Shots > தமிழ்

By |
Rishabh Pant praises MS Dhoni for his success

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் இளம் விக்கெட்கீப்பரான ரிஷப் பண்ட் தன் வெற்றியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எவ்வாறு பங்காற்றினார் என்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். தனக்கு எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தோனியை நாடுவதாக கூறியிருக்கிறார் பண்ட்.


விக்கெட்கீப்பிங்கை பொறுத்தவரை கைகள் மற்றும் தலையின் ஒத்திசைவு முதலில் அவசியம் என்றும் உடலின் ஒத்திசைவு அதன் பிறகே என்றும் தோனி கூறியதாகவும் அது தனக்கு அதிகம் உதவியதாகவும் கூறுகிறார் பண்ட். மேலும், கிரிக்கெட் ஆட்டக் களமானாலும் சரி அதற்கு வெளியேயும் சரி பொறுமையைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம் என்றும் தோனி அறிவுரை அளித்ததாக இந்த ஐபிஎல் நட்சத்திரம் கூறுகிறார்.


தனது வெற்றிக்கு தோனியைக் காரணமாகக் கூறும் இவர் தற்போதைய இந்திய ஏ அணியின் பயிற்சியாளரும் முன்னாள் இந்திய விக்கெட்கீப்பருமான ராகுல் ட்ராவிட்டின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். சமீபத்திய ஆட்டங்களில் சிறப்பான விளையாடியதற்காக ட்ராவிட் பண்ட்டை பாராட்டியிருந்தார்.

Tags : #MSDHONI #INDIATOUROFENGLAND #RISHABHPANT