கருணாநிதி உடல் நலம் குறித்த வதந்தி - மு க ஸ்டாலின் விளக்கம்

Home > News Shots > தமிழ்

By |
MK Stalin clarifies on Karunanidhi\'s health, asks not to believe rumou

சென்ற வாரம் 18ஆம் தேதி அன்று சீராக மூச்சு விடுவதற்காக தனக்குப் பொருத்தப்பட்டுள்ள ட்ராக்கியாஸ்டமி கருவியில் உள்ள பழைய குழாயை மாற்றுவதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குச் சென்று திரும்பினார் திமுக தலைவர் மு கருணாநிதி. இதைத் தொடர்ந்து அவரது உடல் நலம் குறித்த வதந்திகள் பரவியதாகக் கூறப்படுகிறது.


இதுகுறித்து இன்று விளக்கமளித்த திமுகவின் செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு க ஸ்டாலின் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும் கூறியிருக்கிறார். மேலும் அவரது உடல் நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.


உடல் நலனில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக அரசியலில் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வில் இருக்கும் 95 வயதான கருணாநிதி அவ்வப்போது மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்.

Tags : #MKSTALIN #DMK #MKARUNANIDHI #KARUNANIDHIHEALTH #RUMOURS