பள்ளத்தாக்கில் 'விழுந்து நொறுங்கிய' பேருந்து-மாணவர்கள் உட்பட 33 பேர் பலி!

Home > News Shots > தமிழ்

By |
33 killed as bus carrying tourists falls into gorge

மஹாராஷ்டிர மாநிலம் ராய்கட் பகுதியில் இன்று காலை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  உள்ளிட்ட 40 பேருடன் சென்ற பேருந்தொன்று, மலைப்பாதையில் விழுந்து நொறுங்கியது.

 

டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சுமார் 500 மீட்டர் பள்ளத்தில் விழுந்த பேருந்து நொறுங்கி சிதைந்தது. பேருந்தில் பயணம் செய்தவர்கள் உடல் உறுப்புகளை இழந்து உயிருக்குப் போராடினர். இதுகுறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட சுமார் 33 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு  உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் தங்களுடைய இரங்கல்களை ட்விட்டர் வழியாக தெரிவித்துள்ளனர்.