பிரதமர் மோடிக்குப் பிறகு இந்தியாவில் அதிகம் வியந்து பார்க்கப்படுபவர் தோனி: சர்வே

Home > News Shots > தமிழ்

By |
Dhoni most popular sportsperson in India, most popular after Modi

யூகோவ் என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில் இந்தியாவில் பிரதமர் மோடிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி மக்களிடையே மிகவும் வியந்து பார்க்கப்படுபவராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்குறது. இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் மோடி பிரபலத்துக்கான மதிப்பீட்டில் 11.9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பரான தோனி 7.7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


விளையாட்டு வீரர்கள்  என்ற அடிப்படையில் பார்த்தால் தோனி தான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்ததாக முன்னாள் பேட்டிங் ஜாம்பாவானான சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்தையும், தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.


தோனி சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடாததால் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தார். அவரின் ஓய்வு பெற வேண்டும் என கேட்டு சர்ச்சைகளும் எழுந்தன. இருப்பினும் 2007ல் இருபது ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2011ல் ஐம்பது ஓவர் உலகக்கோப்பை ஆகியவற்றை இந்தியாவிற்கு பெற்றுத்தந்த தோனி, சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்தும் சாதனை புரிந்திருக்கிறார்.

Tags : #MSDHONI #VIRATKOHLI #NARENDRAMODI #SACHINTENDULKAR #YOUGOV #SURVEY