'நீங்க வேடிக்கை பாருங்க'.. கோபத்தில் கொந்தளிக்கும் கமல்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 4th Promo Video 1

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற சமீபத்திய டாஸ்க்கில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் சனிக்கிழமையான இன்று கமல் என்ன செய்ய போகிறார்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், எனக்கு ஒரு கடமையும்-பொறுப்பும் உள்ளதாக நான் நினைக்கிறேன். அதனை செய்ய வேண்டியுள்ளது. கமல் என்ன செய்யப்போகிறார் என நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்கள்.

 

நீங்கள் வேடிக்கை பாருங்கள். நான் வேலையைப் பார்க்கிறேன்,'' என கமல் கோபத்துடன் தெரிவிப்பது போல காட்சிகள் உள்ளன. பின்னணியில் யார் என்று புரிகிறதா? இவன் தீ என்று தெரிகிறதா? என பாடல் ஒளிபரப்பாகிறது.

 

இதனால் இன்றிரவு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சில குறும்படங்கள், கண்டிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.