'யாஷிகா-மஹத் பேரு கெட்டுப்போச்சு'.. கண்டபடி கவலைப்படும் 'சீக்ரெட்' போட்டியாளர்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 2nd Promo Video 3

சீக்ரெட் ரூமில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருந்த வைஷ்ணவி, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது போல இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் வெளியாகின.


தொடர்ந்து மஹத்,ஷாரிக், யாஷிகா, ரித்விகா ஆகியோர் ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டிருப்பது போலவும் ஐஸ்வர்யாவை, பொன்னம்பலம்-சென்றாயன் இருவரும் நீச்சல் குளத்துக்குள் பிடித்து தள்ளுவது போலவும் 2-வது ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் வெளியாகின.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் வைஷ்ணவி மஹத்-யாஷிகா இருவருக்கும் அட்வைஸ் செய்வது போலவும், அவரைச்சுற்றி ஜனனி,ஐஸ்வர்யா அமர்ந்திருப்பது போலவும் காட்டப்படுகிறது. மேலும், ஐஸ்வர்யா சாதாரண உடையில் அமர்ந்திருப்பது போல காட்சிகள் உள்ளதால், அவரின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதை அறிய முடிகிறது.

 

இதனால் இன்றிரவு பிக்பாஸ் வீடு பயங்கர ரணகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.