'பிக்பாஸ் ராணி'யை நீச்சல் குளத்துக்குள் தள்ளிய சித்தப்பா.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 2 Promo Video 2

சீக்ரெட் ரூமில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டிருந்த வைஷ்ணவி, தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது போல இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் உள்ளன. உள்ளே வரும் அவரைப்பார்த்து சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.


தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் 'நேர்மையான' போட்டியாளர்களை, வைஷ்ணவி வரிசைப்படுத்துவது போல காட்டப்பட்டது.


இந்தநிலையில் மஹத்,ஷாரிக், யாஷிகா, ரித்விகா ஆகியோர் ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டிருப்பது போலவும் ஐஸ்வர்யாவை, பொன்னம்பலம்-சென்றாயன் இருவரும் நீச்சல் குளத்துக்குள் பிடித்து தள்ளுவது போலவும் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் வெளியாகியுள்ளன.


இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.