ஒருவேளை உணவுக்கு ரூபாய் '7 லட்சம்' பில் செலுத்திய கிரிக்கெட் வீரர்!

Home > News Shots > தமிழ்

By |
Former Cricketer Aakash Chopra spends 7 lakhs on Indonesian food

ஒருவேளை மதிய உணவுக்கு ரூபாய் 7 லட்சம் பில் செலுத்தியதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.இவர் சமீபத்தில் இந்தோனேஷியா சென்றபோது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

 

சாப்பிட்ட பின் சர்வர் பில் கொண்டுவர அதனைப்பார்த்த ஆகாஷ் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். ஏனெனில் சுமார் 7 லட்ச ரூபாய்க்கு பில் வந்துள்ளது. பின்னர் விசாரித்ததில் இந்திய பணத்தின் 1 ரூபாய் இந்தோனேஷியாவில்  210 ரூபாய்க்கு சமம் என்பது தெரியவந்துள்ளது.

 

அதன்படி சுமார் 3354 ரூபாயை பில்லாக செலுத்திய ஆகாஷ் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இந்தோனேஷியா உங்களை அன்புடன் வரவேற்கிறது என தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Former Cricketer Aakash Chopra spends 7 lakhs on Indonesian food | தமிழ் News.