ஹெல்மெட் போட்டுக்கொண்டு 'புல்லட்டில்' ஊரைச்சுற்றிப் பார்க்கும் தல.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 29, 2018 01:21 PM
MS Dhoni enjoys a Bike ride in Shimla

கிரிக்கெட் வீரர் தோனி 5 நாள் சுற்றுப்பயணமாக தனது குடும்பத்தினருடன் சிம்லா சென்றிருக்கிறார். சிம்லாவில் தற்போது ராயல் என்பீல்டு பைக் விளம்பரத்தில் தோனி பங்கேற்று நடித்து வருகிறார்.

 

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு தோனி சக நடிகருடன் பைக்கில் ஊரைச்சுற்றிப் பார்ப்பது போல உள்ளது.

 

இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு தனியாக தோனி ரோட்டில் செல்கிறார். அவருக்கு முன்னால்  ஷேர் ஆட்டோ ஒன்றும்,லாரியும் செல்வது போல காட்சிகள் உள்ளன.