'சர்கார் குறித்து அப்டேட் தர முடியவில்லை'.. மன்னித்துக் கொள்ளுங்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 13, 2018 09:55 PM
Lyricist Vivek says he can\'t give any update on Sarkar

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் குறித்து எந்த அப்டேட்டும் அளிக்க முடியவில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள் என பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

 

விஜய்-கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி மற்றும் பிற விவரங்கள் குறித்து அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இந்தநிலையில் இப்படத்தின் பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், '' சர்கார் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பீர்கள். அவர்கள் சரியான தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

 

என்னால் எந்த தகவலையும் தற்போது தர முடியவில்லை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஒருமுறை சர்கார் குறித்த அப்டேட்டுகள் வெளியாகத் தொடங்கி விட்டால் அடுத்த 2 மாதத்துக்கு சர்கார் வெள்ளத்தில் நீங்கள் மூழ்கடிக்கப்படுவீர்கள்,'' என தெரிவித்துள்ளார்.