வாரம் முழுவதும் 'விஜய் ரசிகர்களுக்கு' விருந்து.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 25, 2018 01:38 PM
Sun pictures release Sarkar Working stills

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க முக்கிய வேடங்களில் ராதாரவி, பழ.கருப்பையா,வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அடுத்த 5 நாட்களும் 'சர்கார்' ஷூட்டிங் தொடர்பான புகைப்படங்களை வெளியிடுவோம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் தற்போது 'சர்கார்' தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.