கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க.. காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற விஜய்!

Home > News Shots > தமிழ்

By |
Actor Vijay visited Kauvery Hospital

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூ வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

 

சிகிச்சைக்கு கருணாநிதி ஒத்துழைப்பதாகவும், இன்னும் சில நாள்கள் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் நேற்று மாலை காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

 

இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கலைஞர் கருணாநிதியை நேரில் காண, நடிகர் விஜய் இன்று காலை 10 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.

 

அங்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினை,விஜய் நேரில் சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையின் முன்னர் கூட்டம் அதிகமாக இருந்ததால், விஜய் பின்வாசல் வழியாக மருத்துவமனையை விட்டு வெளியேறினார். 


முன்னதாக நடிகர்கள் சூர்யா,விக்ரம், ரஜினிகாந்த் ஆகியோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.