காவேரி மருத்துவமனைக்கு ஆ.ராசா மீண்டும் வருகை

Home > News Shots > தமிழ்

By |
A.Raja came again Kauvery Hospital

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது என்றும் தற்போது அவரது நலமாக இருக்கிறார் எனவும், நேற்று இரவு 9.50 மணியளவில் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

 

தொடர்ந்து தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தலைவர் கருணாநிதி அவர்கள் நலமாக இருக்கிறார் எனவும், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.

 

இந்தநிலையில் வீட்டிற்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் எ.வ.வேலு ஆகியோர் மருத்துவமனைக்கு மீண்டும் வந்துள்ளனர்.இதனால் காவேரி மருத்துவமனைக்கு வெளியே மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.

 

இதற்கிடையில் கோபாலபுரம்  இல்லத்தின் முன்பு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டதால், அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.