தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார்: ஆ.ராசா

Home > News Shots > தமிழ்

By |
DMK leader Karunanidhi is now out of danger says A.Raja

திமுக தலைவர் கருணாநிதி கூடுதல் சிகிச்சைக்காக சற்றுமுன், ஆம்புலன்ஸில் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதனைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவியத்தொடங்கினர். இதனால் காவேரி மருத்துவமனையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தநிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா," திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட  ரத்த அழுத்தக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

20 நிமிட தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக இருக்கிறார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை.விரைவில் மருத்துவக்குழு அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடும்.தொண்டர்கள் உணர்ச்சி வசப்படவோ,பயப்படவோ வேண்டாம்,'' என தெரிவித்துள்ளார்.