கருணாநிதி இல்லத்திற்கு தலைவர்கள் வருகை; உடல் நலம் குறித்து விசாரிப்பு

Home > News Shots > தமிழ்

By |
Tamil Nadu leaders visit Karunanidhi residence in Gopalapuram, health

வயது மூப்பின் காரணமாக உடல் நலத்தில் தொய்வு ஏற்பட்டுள்ள திமுக தலைவர் மு கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேற்று வருகை தந்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.


இவர்கள் தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன் மற்றும் ஞானதேசிகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல். திருமாவளவன், மக்கள் நீதி மையம் நிறுவனர் கமலஹாசன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரும் கருணாநிதி இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.


அவரது உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காவேரி மருத்துவமனை அவரின் உடல் நலம் குன்றியிருப்பதால் அதைக் கருத்தில் கொண்டு அவரை நேரில் பார்க்க யாரும் வரவேண்டாம் என்றும் சிறுநீரகப்பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக காய்ச்சல் வந்துள்ளதால் அவரது வீட்டிலேயே 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.

Tags : #MKARUNANIDHI #DMK #KARUNANIDHI50YEARSDMKPRESIDENT