கலைஞர் குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்

Home > News Shots > தமிழ்

By |
Don\'t believe any rumors about Karunanidhi: MK Stalin

கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமுக வலைதளங்களில் சில விரும்பத்தகாத தகவல்கள் வதந்திகளாக உலா வருகின்றன. இந்தநிலையில் விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம் அனைவரின் உயிருக்கும் உயிரான தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை அவர்தம் அன்பு உடன்பிறப்புகளான கழகத்தொண்டர்களும், கட்சி சார்பற்ற முறையில் தலைவர் அவர்களின் உடல்நலம் பற்றி விசாரித்து வரும் அனைத்து கட்சி மக்களும் நம்ப வேண்டாம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

 

கருணாநிதிக்கு 24 மணிநேரமும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அவரை சந்திக்க வருவதை பொதுமக்களும், தொண்டர்களும் தவிர்க்க வேண்டும்,'' என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.