'தலைவரை ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன் பா'.. நெகிழவைத்த பாட்டி!

Home > News Shots > தமிழ்

By |
85 years old women visited Chennai from Thirukkuvalai

வயது மூப்பின் காரணமாக கலைஞர் கருணாநிதிக்கு உடல் நலிவு ஏற்பட்டுள்ளது என்றும்,சிறுநீரகத்தொற்று  காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும், காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

 

இதனைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் அவரின் வீட்டுக்கு முன்பாக குவியத்தொடங்கியுள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறியும் பொருட்டு அவரது இல்லத்துக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், மதிமுக தலைவர் வைகோ,தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, தா.பாண்டியன்,பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், குஷ்பூ என ஏராளமான தலைவர்கள் நேரில் சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

 

இந்தநிலையில் கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து 85 வயது மூதாட்டி ஒருவர் தனியாக பயணம் செய்து கலைஞரை சந்திக்க வந்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ரத்தினம் என்ற அந்த பாட்டி தனக்கு திருமணம் செய்துவைத்த கலைஞர் உடல்நலமின்றி இருப்பதை அறிந்து தனி ஒருத்தியாக திருக்குவளையில்  இருந்து புறப்பட்டு சென்னை வந்ததை, அறிந்து திமுக தொண்டர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.

 

இதுகுறித்து பேஸ்புக்கில் திமுக பிரமுகர் ஒருவர் பதிவிட தற்போது அது வைரலாகி வருகிறது.