'சந்திரனுக்கு தான் கிரகணம்;சூரியனுக்கு அல்ல'.. தொண்டர்கள் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By |
Netizens talks about Kalaignar Karunanidhi Health

திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சளித்தொல்லை காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நான்கு மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை செய்து வருகிறது.

 

வயது மூப்பின் காரணமாக அவருக்கு உடல் நலிவு ஏற்பட்டுள்ளது என்றும்,சிறுநீரகத்தொற்று  காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும், காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

 

இதனைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் அவரின் வீட்டுக்கு முன்பாக குவியத்தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு கட்சித்தலைவர்களும்,திரைப்பிரபலங்களும் அவரின் உடல்நிலை குறித்து நேரிலும்,தொலைபேசி வாயிலாகவும் விசாரித்து வருகின்றனர்.

 

இதனால் கலைஞர் வீட்டுக்கு செல்லும் வழியிலும் அவரின் வீட்டுக்கு முன்பாகவும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் திமுக கட்சியின் தலைவராகவும் 50 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கருணாநிதி விரைவில் நலம்பெற வேண்டும் என, கட்சித்தொண்டர்கள் மனமுருகப் பிரார்த்தித்து வருகின்றனர்.

 

இதற்கிடையில், "இன்று சந்திரனுக்கு தான் கிரகணம் #சூரியனுக்கு அல்ல மீண்டு(ம்) வர வேண்டுகிறோம்,'' என நெட்டிசன்களும் அவர் நலம்பெற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர். இதனால் ட்விட்டரில்  #karunanidhi #karunanidhi health போன்ற ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து டிரெண்டாகி வருகின்றன.