ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு 'அழைத்து' செல்லப்பட்ட கருணாநிதி..தொண்டர்கள் பதட்டம் !

Home > News Shots > தமிழ்

By |
DMk Leader Karunanidhi shifted to Kauvery hospital

திமுக தலைவர் கருணாநிதி கூடுதல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.இதனால் தொண்டர்கள் மத்தியில் தொடர் பதட்டம் நிலவிவருகிறது.

 

வயது மூப்பின் காரணமாக கருணாநிதிக்கு உடல் நலிவு ஏற்பட்டுள்ளது என்றும், சிறுநீரகத்தொற்று  காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும், காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள்,தொண்டர்கள் அவரின் கோபாலபுரம் இல்லத்துக்கு முன் குவியத் தொடங்கினர்.

 

தொடர்ந்து இன்று மாலை கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

 

திடீரென நள்ளிரவு 12 மணியளவில் கோபாலபுரம் இல்லத்துக்கு கலைஞர் அவர்களின் தனி மருத்துவர் கோபால், ஸ்டாலின், அழகிரி, துரைமுருகன்,தயாநிதிமாறன், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.

 

இந்தநிலையில் சற்றுமுன் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில்   அழைத்து செல்லப்பட்டுள்ளார். கருணாநிதிக்கு கூடுதல் சிகிச்சை அளிப்பதற்காக, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவியத்தொடங்கியுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.