காவேரி மருத்துவமனையில் திடீர் பரபரப்பு - தொண்டர்கள் கலக்கம்!

Home > News Shots > தமிழ்

By |
Karunanidhi family members at Cauvery Hospital

திமுக தலைவர் கருணாநிதி கூடுதல் சிகிச்சைக்காக,ஆம்புலன்ஸில் காவேரி மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இதனைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவியத்தொடங்கினர். இதனால் காவேரி மருத்துவமனையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.தொடர்ந்து அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

 

இந்தநிலையில் சற்றுமுன் கருணாநிதி ஸ்டாலின், ராஜாத்தியம்மாள், கனிமொழி, உதயநிதி என அனைவரும் காவேரி மருத்துவமனக்கு  வந்துள்ளனர். இதேபோல் தொண்டர்களும் அதிகளவில் குவிந்துள்ளனர்.

 

இதற்கிடையே, காவேரி மருத்துவமனையில் இருந்து வெளிநபர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் திமுக முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்திற்குள் தொண்டர்கள், பொதுமக்கள் செல்லாதபடி தடுப்பு சுவர்களை அமைத்து பொதுமக்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதனால் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.