'நான் சிரிக்கிறதை பார்த்தாலே தெரியலையா'.. மருத்துவமனையில் கலகலத்த துரைமுருகன்!

Home > News Shots > தமிழ்

By |
Durai Murugan talks about Karunanidhi Health

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது என்றும் தற்போது அவரது நலமாக இருக்கிறார் எனவும், நேற்று இரவு 9.50 மணியளவில் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

 

எனினும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் தொண்டர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

இந்தநிலையில் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.இதேபோல, ''திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது.கட்சி தொண்டர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை,'' என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து தொண்டர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வண்ணம், '' நான் சிரித்தபடி உற்சாகமாக நடமாட காரணமே தலைவர் நன்றாக இருப்பது தான். முன்னைவிட வேகமான பழைய தலைவரை நீங்க  அறிவாலயத்துல பார்க்க போறீங்க,'' என சிரித்தபடி துரைமுருகன் கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனை முன் திரண்டிருந்த திமுக தொண்டர்களுக்கு, தற்போது கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.