'திரும்பி வா தலைவா'.. தொண்டர்களின் கோஷத்தால் அதிரும் மருத்துவமனை வளாகம் .. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Watch Video: DMK Volunteers slogan at Kauvery Hospital

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது என்றும் தற்போது அவரது நலமாக இருக்கிறார் எனவும், நேற்று இரவு 9.50 மணியளவில் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.


தொடர்ந்து தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தலைவர் கருணாநிதி அவர்கள் நலமாக இருக்கிறார் எனவும், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.

 

இந்தநிலையில்  சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் சற்றுமுன் காவேரி மருத்துவமனைக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு நிலவிவருகிறது. இதுதவிர துணை ராணுவமும் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதற்கிடையில் 'திரும்பி வா தலைவா' என காவேரி மருத்துவமனைக்கு வெளியே, தொண்டர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் கோஷமிட்டு வருகின்றனர்.