'மருத்துவ சிகிச்சைக்கு கருணாநிதி ஒத்துழைக்கிறார்'.. காவேரி மருத்துவமனை அறிக்கை!

Home > News Shots > தமிழ்

By |
Official Press release from Kauvery Hospital about Karunanidhi Health

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூ வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

 

இந்தநிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என, காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், '' கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. அவருக்கு இன்னும் மருத்துவ உதவி தேவைப்படுகிறது.வயது காரணமாக இன்னும் சில நாள்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்.

 

ரத்தம், கல்லீரல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. 29-ம் தேதி ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு அவரது உடல்நிலை சீராகி வருகிறது.மருத்துவ சிகிச்சைக்கு கருணாநிதி ஒத்துழைப்பு தருகிறார்,'' இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.