திமுக தலைவர் கருணாநிதியை ஐசியூவில் பார்த்த ராகுல்காந்தி - புகைப்படம் வெளியீடு!

Home > News Shots > தமிழ்

By |
Rahul Gandhi visits Karunanidhi at Kauvery Hospital, photo released

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூ வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

 

இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மதியம் காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை ஐசியூ வார்டில் சென்று நேரில் பார்த்தார்.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

 

தற்போது ஐசியூ வார்டில் கருணாநிதியை ராகுல்காந்தி நேரில் பார்த்த புகைப்படத்தை திமுக வெளியிட்டுள்ளது.இதில் கண் திறந்து கருணாநிதி பார்க்க ஸ்டாலின், ராகுல் காந்தி வந்திருப்பதை கூறுவது போல புகைப்படம் உள்ளது.