காவேரி மருத்துவமனைக்கு வெளியே 'பிக்பாக்கெட்' அடித்ததாக 13 பேர் கைது!

Home > News Shots > தமிழ்

By |
13 arrested for stealing money from Kauvery hospital outside

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூ வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

 

இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புக்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தநிலையில் கட்சி தொண்டர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பிக்பாக்கெட் அடித்ததாக 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் திருட்டைத் தடுக்க போலீசார் மருத்துவமனைக்கு வெளியே தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.