'ஆளப்போறான் தமிழன்'... மீண்டும் அட்லீயுடன் கைகோர்த்த 'தளபதி'

Home > News Shots > தமிழ்

By |
Vijay 63 to be directed by Atlee and produced by AGS entertainment

சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லீயின் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அவரின் 62-வது படமாக உருவாகி வரும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.இதைத் தொடர்ந்து விஜய்யின் 63-வது படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

 

மோகன்ராஜா,ஹெச்.வினோத் இருவரில் யாராவது ஒருவர் விஜய் 63 படத்தை இயக்குநர்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் 63 படத்துக்காக அட்லீயுடன்-விஜய் மீண்டும் கூட்டணி அமைக்கப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கப் போவதாகவும், 2019-ம் ஆண்டு ஜனவரியில் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS STORIES

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vijay 63 to be directed by Atlee and produced by AGS entertainment | தமிழ் News.