Biggest Icon of Tamil Cinema All Banner

தளபதி 62 படத்தின் 'தலைப்பு' இதுதான்!

Home > News Shots > தமிழ்

By |
Thalapathy 62 Title and First look now revealed

விஜய்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் 'தளபதி62' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'துப்பாக்கி', 'கத்தி' படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இப்படத்தில் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

 

இந்த நிலையில் நடிகர் விஜய்யின்  44-வது பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி 62 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்துக்கு  'சர்க்கார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

தற்போது தளபதி ரசிகர்கள் அனைவரும் சர்க்கார் படத்தின்  தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கினை சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிர்ந்து, தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

RELATED NEWS SHOTS

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thalapathy 62 Title and First look now revealed | தமிழ் News.