துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு... நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!

Home > News Shots > தமிழ்

By |
Actor Vijay visits sterlite plant protest victims families

கடந்த மே 22-ந்தேதி தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

 

பேரணியின்போது கலவரம் ஏற்பட்டது. கலவரத்தைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். இதுதவிர 100-க்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தநிலையில்,துப்பாக்கி சூட்டில் பலியான தூத்துக்குடி மக்களுக்கு நேற்று நள்ளிரவு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் வழங்கினார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியையும் விஜய் அளித்துள்ளார்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor Vijay visits sterlite plant protest victims families | தமிழ் News.