'பிரியமான இளையதளபதி அண்ணா'.. இளம் இயக்குநரை துள்ளிக்குதிக்க வைத்த தளபதி!

Home > News Shots > தமிழ்

By |
Vijay wishes Arunraja Kamaraja for Kanaa

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்திற்கு 'கனா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

இந்த நிலையில், மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் 'கனா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நடிகர் விஜய், அருண்ராஜா காமராஜ்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னை உற்சாகப்படுத்தவும், பாராட்டவும் நீங்கள் என்றுமே தவறியதில்லை என்னுடைய பிரியமான 'இளையதளபதி' அண்ணா. காலையில் எழுந்து உங்களின் மெசேஜ் பார்த்தேன். மும்முடங்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது.

 

என்னுடைய சிறந்த நாள் இதுவாகத்தான் இருக்கும். உங்களுக்கு வெறும் நன்றி மட்டுமே சொன்னால் போதாது. என்றுமே உங்களை நேசிக்கிறேன்,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vijay wishes Arunraja Kamaraja for Kanaa | தமிழ் News.