'சர்கார்' ஆடியோ லாஞ்சை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்...ரசிகர்கள் கொண்டாட்டம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 24, 2018 02:55 PM
An important announcement about Sarkar this evening: Sun Pictures

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க முக்கிய வேடங்களில் ராதாரவி, பழ.கருப்பையா,வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

 

இன்று மாலை இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிடுகிறோம், தயாராக இருங்கள் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மதியம் அறிவித்தது.

 

இந்தநிலையில் சர்கார் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் என, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.