அமெரிக்காவில் இருந்து வந்ததும் வீட்டுக்கு கூட போகாமல் ’விஜய்’ அஞ்சலி..வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Actor vijay pays his last respect to karunanithi

94 வயதில், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த வாரம் மறைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு அருகே நினைவிடம் அமைக்கப்பட்டு கட்சித்தொண்டர்களாலும் பொதுமக்களாலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. 

 

திரைப் பிரபலங்களும், வேறு அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்திவந்த நிலையில், நடிகர் விஜய் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன்  நேரே திமுக தலைவர் கருணாநிதி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். 

 

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜய்; வீட்டுக்கு கூட செல்லாமல் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது அவருக்கு கருணாநிதி மீதுள்ள மரியாதையைக் காட்டுவதாக அவரட்து ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.