'இரு சூரியன் ஒருசேர மறைந்ததோ'.. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By |
DMDK leader Vijayakant pens poem to Karunanidhi

மறைந்த கலைஞர் கருணாநிதி குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கவிதை ஒன்றை உருக்கத்துடன் எழுதி வெளியிட்டுள்ளார். அதனை இங்கே பார்க்கலாம்.

 

உலகமே உங்களை கலைஞரே! என்று அழைத்தாலும்

அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து

உங்களுடன் பழகிய அந்த நாட்களை

எண்ணி வியக்கிறேன். விம்முகிறேன்.

தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு!

என்று மாற்றிக் காட்டிய ஒப்பற்ற தலைவரே!

அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை.

ஆனால் 7.8.2018 அன்று மாலை 6.10 மணியளவில்

இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ!

என்று என்னும் வண்ணம், இவ்வுலகையே இருட்டாக்கியது

போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே!

உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும்,

உங்களை வணங்குகிறேன்.