'அண்ணாவின் அருகே தம்பி கருணாநிதி' துயில் கொள்ளப்போகும் இடம் இதுதான்!

Home > News Shots > தமிழ்

By |
Karunanidhi\'s body buried in anna memorial

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு  இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் தற்போது ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என திமுக கழகம் அறிவித்தது.

 

அந்தவகையில் தற்போது அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் தற்போது கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.சிவானந்தா சாலை,வாலஜா சாலை வழியாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அண்ணா சதுக்கத்தை அடையும். பின்னர் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் மெரினாவில்  நல்லடக்கம் செய்யப்படும்.

 

முன்னதாக எம்ஜிஆர் சமாதி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதேபோல தற்போது அண்ணா சமாதியின் அருகே கலைஞர் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படும்.