திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் 4 மணிக்கு தொடங்குகிறது !

Home > News Shots > தமிழ்

By |
kalaignar to be taken from rajaji hall to marina at 4 pm

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் இறுதி ஊர்வலமாக மாலை 4 மணிக்கு மெரினாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

 

உடலை மெரினாவில்  அடக்கம் செய்வதற்கு திமுக வைத்த கோரிக்கையை தமிழக அரசு முதலில் நிராகரித்தது. இதையடுத்து, கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு ஆணையிட  சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கை தொடர்ந்தது.

 

சுமார் 14 மணி நேர சட்ட போராட்டத்திற்கு பிறகு கலைஞர்  கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதையடுத்து, கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது.