’செல்லமாக விஜி.. விஜி.. என அழைப்பார்’.. தேம்பி அழும் விஜயகாந்த்! வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Vijayakanth Cries For Karunanithi\'s Death!

குடும்பத்துடன் அமெரிக்காவில் சென்றுள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கலைஞர் கருணாநிதியின் இறப்புக்கு,  வருந்தி இரங்கல் தெரிவித்து வீடியோப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் பேசியுள்ள விஜயகாந்த்,  ‘அநியாயமா இறந்துட்டார் கலைஞர் . 5 முறை முதல்வராக இருந்தவர். என் எண்ணம் எல்லாம் அவர் மீதுதான் இருக்கிறது இப்போது. அவர் என்னை செல்லமாக விஜி விஜி என்று கூப்பிடுவார(பீறிட்டு அழுகிறார்). உனக்காக நான் தங்கப் பேனா கூட தருவேன். கலைஞரின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை(மீண்டும் அழுகிறார்)’ என்று கூறியுள்ளார்.

 

இவ்வாறு விஜயகாந்த், தேம்பித் தேம்பி அழுகிற காட்சி காண்போரை உருக்கச் செய்வதோடு, இந்த வீடியோ பதிவு, கலைஞர் கருணாநிதியின் மீது விஜயகாந்துக்கு இருந்த பிரியம் வெளிப்படுவதாய் அமைந்துள்ளது. விஜயகாந்துக்கு திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MKARUNANIDHI #VIJAYAKANTH #MKSTALIN #DMK #KARUNANIDHIDEATH #KALAINGAR #VIJAYAKANTHCRIES4KALAINGAR