தமிழின தலைவருக்கு மெரினாவில் இடம் வேண்டும்.. நடிகர் விஷால் கோரிக்கை !!

Home > News Shots > தமிழ்

By |
Actor Vishal statement on Kalaigar karunathidhi death

கலைஞருக்கு மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகில் இடம் ஒதுக்க வேண்டும் என நடிகர் விஷால் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

 


கலைஞரின் இடத்தை வேறுயாராலும் நிரப்ப முடியாது எனவும், தமிழ்நாட்டிற்கும்,தமிழக கலைத்துறைக்கும் அவர் ஆற்றிய சேவை என்பது அளப்பரியது.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும்,அவரது கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

 

அவருடைய சினிமா வசனங்கள் காலத்தையும் தாண்டி நிற்பவை. அவ்ருடைய இழப்பு கலைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். கலைஞரின் 50 வருட அரசியல் வாழ்க்கைக்கு மதிப்பளித்து மெரினாவில் இடம் ஒதுக்க வேன்டும் என தெரிவித்துள்ளார்.

 

மேலும் தமிழக அரசு கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : #MKARUNANIDHI #KARUNANIDHIDEATH #ACTOR VISHAL