கருணாநிதி உடல்நிலை குறித்த..காவேரி மருத்துவமனையின் கடைசி அறிக்கை!

Home > News Shots > தமிழ்

By |
What the final press release of kauvery hosptial says

காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி, இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

 

இதுபற்றிய காவேரி மருத்துவமனையின் இறுதி மருத்துவ அறிக்கையில், மருத்துவர்களின் தீராத முயற்சிகளுக்கும், கடும் சிகிச்சைகளுக்கும் பலனின்றி திமுக தலைவர் கருணாநிதியின் உடல், ஆகஸ்ட் 07, 2018ம் நாளான இன்று மாலை 6.10 மணி அளவில் உயிர் பிரிந்தது என்று கூறப்பட்டுள்ளது.

 

மேலும் தமிழகத்தின் உயர்ந்த, மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியின்  குடும்பத்தாருக்கும், அவரை இழந்த உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் இந்த துயரமான செய்தியை சொல்லிக்கொள்வதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.