தமிழக முதல்வருடன் டிஜிபி-தலைமைச்செயலாளர் 'அவசர' ஆலோசனை!

Home > News Shots > தமிழ்

By |
KarunanidhiHealth: Tamil Nadu CM discuss law and order with DGP

கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும்  காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது.இதைத்தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

 

இந்தநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழக டிஜிபி ராஜேந்திரன் மற்றும் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

 

முன்னதாக மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.