'கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்'.. திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Home > News Shots > தமிழ்

By |
KarunanidhiHealth: MK Stalin discussion with party members

கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்தனர்.

 

இதனால் தொண்டர்கள் தொடர்ந்து பதட்டத்துடன் வெளியே காத்துக் கொண்டுள்ளனர். நேற்று வெளியிட்ட அறிக்கையில் 24 மணி நேரத்துக்குப் பின்னரே அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்க முடியும் என்று கூறப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து சென்னை முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் கழக நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.