'கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க'.. காவேரி மருத்துவமனைக்கு வரும் குடியரசுத்தலைவர்!

Home > News Shots > தமிழ்

By |
President Ram Nath Kovind comes to Chennai

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே, ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

 

சிகிச்சைக்கு கருணாநிதி ஒத்துழைப்பதாகவும், இன்னும் சில நாள்கள் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் சமீபத்தில்  காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம்  நலம் விசாரித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, வருகின்ற 5-ம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனைக்கு நேரில் வரவிருக்கிறார்.

 

முன்னதாக பிரதமர் மோடி தொலைபேசியில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #DMK #MKARUNANIDHI #KAUVERYHOSPITAL #KARUNANIDHI #RAMNATH KOVIND