'உடல்நிலையில் முன்னேற்றம்'.. நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி!

Home > News Shots > தமிழ்

By |
DMK Leader Karunanidhi Health details

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூ வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

 

சிகிச்சைக்கு கருணாநிதி ஒத்துழைப்பதாகவும், இன்னும் சில நாள்கள் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.


இந்தநிலையில் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் மேலும் முன்னேற்றமாக அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார் என்றும், டாக்டர்கள் அவரை படுக்கையில் சிறிது நேரம் அமரவைத்தனர். அதன் பிறகு அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்து சிறிது நேரம் பயிற்சிகள் அளித்தனர் என்றும் கூறப்படுகிறது.

 

மேலும், கருணாநிதி செயற்கை சுவாசம் இல்லாமல் தானாகவே சுவாசிக்கிறார் என்றும் தேவைப்படும் போது மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். தற்போது திரவ உணவு குழாய் வழியாக அவருக்கு செலுத்தப்படுகிறது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.